பிரயாக்ராஜ் என பெயர் மாறுகிறது புகழ்பெற்ற அலகாபாத்!
உத்தரபிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற அலகாபாத் நகரின் பெயர், பிரயாக்ராஜ் என மாற்றப்படும் என அம்மாநில முதலமைச் சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறும்போது, ‘அலகாபாத் நகரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பது சாதுக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அடுத்த ஆண்டு கும்பமேளாவுக்குள் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ராம் நாயக்கும் ஒப்புதல் அளித்துவிட்டார். இதனால் விரைவில் அலகாபாத் பெயர் பிரயாக்ராஜ் என மாற்றப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அலகாபாத்தின் பழங்கால பெயர் பிரயாக். 16-வது நூற்றாண்டில் மொகலாய பேரரசர் அக்பர் இந்தப் பகுதியின் பெயரை இல ஹாபாத் என்று மாற்றினார். பின் அக்பரின் பேரன் ஷாஜஹான், அலகாபாத் என்று இதன் பெயரை மாற்றியதாகக் கூறப்படு கிறது. ஆனால், இங்கு திரிவேணி சங்கமம் பகுதி பிரயாக் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.