கஃபீல் கான் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டம் ரத்து; உடடினயாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

கஃபீல் கான் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டம் ரத்து; உடடினயாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
கஃபீல் கான் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டம் ரத்து; உடடினயாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட  மருத்துவர் கஃபீல் கானை விடுவித்து உத்தரவிட்டுள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
 
கடந்த ஆண்டு டிசம்பரில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக, கோரக்பூரை சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் மீது, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மதுரா சிறையில் மருத்துவர் கஃபீல்கான் அடைக்கப்பட்டுள்ளார்.
 
சில வாரங்களுக்கு முன்னதாக கஃபீல்கான் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் மருத்துவர் கஃபீல் கான் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com