உயிரைக் கொல்லும் ‘நிபா’

உயிரைக் கொல்லும் ‘நிபா’

உயிரைக் கொல்லும் ‘நிபா’
Published on

கேரளாவில் புதிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ள ‘நிபா’ வைரஸை எதிர்க்கொள்ள எந்த மருந்தும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

இந்த வைரஸ் எப்படி பரவுகிறது, நோயின் அறிகுறிகள் என்ன?

‘நிபா’ வைரஸ் பாதிப்பு முதன்முறையாக 1998ம் ஆண்டு மலேசியாவில் ஏற்பட்டது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்ட கிராமத்தின் பெயரையே வைரஸுக்கு பெயராக வைத்துள்ளனர். ‘நிபா’ வைரஸ் பழங்களை உண்ணும் ஒரு வகை வவ்வால்களால் பரவுகிறது. அந்த வவ்வால்களின் சிறுநீரிலும், மலம் போன்றவற்றின் மூலம் வைரஸ் பரவுகிறது. மலேசியாவில் பன்றி பண்ணைகள் இருந்த பகுதியில் வவ்வால்கள் வந்ததால் முதலில் பன்றிகளுக்கு வைரஸ் பரவியது. பின்னர் இந்தப் பன்றிகளின் கழிவை நேரடியாக தொட்ட மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இது மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவிய செய்திகளும் உள்ளன.

இந்த வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகளை பார்க்கும்போது காய்ச்சல், கடுமையான தலைவலி, மயக்கம், மனக்குழப்பம் போன்றவை ஏற்பட்டு மூளைக் காய்ச்சலாக தீவிரமடையும். வைரஸின் தாக்கம் மிகத் தீவிரமாகும் போது கோமா ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வைரஸை குணப்படுத்த எந்த மருத்துவமும் தனியாக இல்லை. காய்ச்சலை கட்டுக்குள் வைப்பது போன்ற துணை சிகிச்சைகள் மூலமே வைரஸை கட்டுப்படுத்த முடியும். வைரஸை கட்டுப்படுத்தினாலும், வலிப்பு, குணாதிசய மாற்றம் போன்ற நீண்டகால பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com