Uttarakhand tunnel: காப்பாற்றப்பட்ட 41 உயிர்கள்! உண்மையான ஹீரோக்கள் மீட்புக்குழுவினர்!

சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றி நிஜ ஹீரோக்காளாக நின்றுள்ளர் மீட்புக்குழுவினர்.

உத்தராகண்ட்டில் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவச் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்காக பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எலிவளை முறையில் சுரங்கத்திற்குள் துளைகள் தோண்டப்பட்டு குழாய் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுரங்கத்திற்குள் செலுத்தப்பட்ட குழாய் மூலம் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், சுரங்கத்திற்கு வெளியே காத்திருந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை
உத்தரகாண்ட் சுரங்கப்பாதைபுதிய தலைமுறை

உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா கிராமத்திற்கு அருகே சுரங்கப்பாதை தோண்டும் பணியின் போது கடந்த 12ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com