இனி வாரத்தில் 5 நாள் மட்டும்தான் வங்கிகள் இயங்கும்?.. அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை?

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
bank
bankfile image

கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளுக்கு 2ஆம் மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதர சனிக்கிழமைகளில் மட்டும் அரைநாள் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை ஏற்ற இந்திய வங்கிகள் சங்கம், அதனை மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துள்ளது.

bank
bankfreepik

இந்தக் கோரிக்கை குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் சூழல் ஏற்படும். இந்த விடுமுறை அமலுக்கு வந்தால் பொதுத்துறை, தனியார், வெளிநாடு, கூட்டுறவு, கிராமப்புறம் மற்றும் உள்ளூர் வங்கிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரையிலான வாரத்தின் 5 நாட்கள் வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

saturday
saturdayfreepik

அந்த நாட்களில், ஒவ்வொரு நாளும் சுமார் 1 மணி நேரம் வேலை நேரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல், வங்கி ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com