All Parties details in Kerala Assembly Elections 2026
கேரள சட்டப்பேரவைத் தேர்தல்chat gpt

1977 முதல் 2021 வரை மாறிமாறி ஆட்சி.. மும்முனைப் போட்டியில் கேரளா.. ஓர் அலசல்!

கேரளத்தில் நடைபெற உள்ளசட்டமன்றத் தேர்தல் எந்த பின்னணியில் நடைபெறுகிறது. பார்ப்போம்...
Published on

140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டமன்றத்தில் ஆளும் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி என 3 அணிகள் களம் காண்கின்றன. இடதுசாரி அணியில் மார்க்சிஸ்ட் 80 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

1977ஆம் ஆண்டிலிருந்து கேரளத்தில் இடதுசாரிகளும் காங்கிரசும் மாறிமாறி ஆண்டுவந்த நிலையில் 2021இல் அச்சங்கிலி உடைபட்டது. பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு 2ஆவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்றது. 3ஆவது முறையாக ஆட்சியை தொடர ஆளுங்கட்சி முயற்சிக்கும் நிலையில் மீண்டும் ஆட்சிக் கட்டிலேற காங்கிரஸ் காய்நகர்த்திவருகிறது. 140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டமன்றத்தில் ஆளும் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி என 3 அணிகள் களம் காண்கின்றன. இடதுசாரி அணியில் மார்க்சிஸ்ட் 80 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் 2ஆவது பெரிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் 21 இடங்களில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் ஆதரவுடன் 16 பேர் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். கேரள காங்கிரஸ்மணி பிரிவு 12 இடங்களில் போட்டியிடுகிறது.

ராஷ்டிரிய ஜனதா தளம் 3 இடங்களில் போட்டியிடுகிறது. தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவுக்கு 3 இடங்கள் தரப்பட்டுள்ளன. பிறர் 5 இடங்களில் களமிறங்குகின்றனர். காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 92 இடங்களிலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 26 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. கேரள காங்கிரஸ் ஜேகப் பிரிவு 8 இடங்களில் நிற்கிறது. புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் பிறர் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் ஆதரவு சுயேச்சைகள் 7 இடங்களில் போட்டியிடுகின்றனர். பாஜக அணியில் பாஜக 98 இடங்களிலும் பாரததர்ம ஜனசேனா கட்சி 22 இடங்களிலும் நிற்கின்றன. டுவென்டி டுவென்டி கட்சி 19 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக ஆதரவுடன் ஒரு சுயேச்சை போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com