‘தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர்’-காலமானார் பிரபலசெய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண ஸ்வாமி

‘தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர்’-காலமானார் பிரபலசெய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண ஸ்வாமி

‘தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர்’-காலமானார் பிரபலசெய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண ஸ்வாமி
Published on

வானொலியில் ஒரு காலத்தில் அதிகாலையில் ஒலித்த, 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண ஸ்வாமி...' என்ற தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.

லட்சக்கணக்கான தமிழர்கள் நாள்தோறும் வானொலில் சரோஜ் நாராயண ஸ்வாமியின் குரலை கேட்டு எழும் காலம் இருந்தது. அகில இந்திய வானொலி வாயிலாக பிரபலமான அவருக்கு, ஒலிபரப்புத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக 2009-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

அகில இந்திய வானொலியில் தமிழ் செய்தி வாசிப்பாளராக பிரபலமான சரோஜ் நாராயண ஸ்வாமி, ஒலிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். 35 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி விடை பெற்ற பின்னர், தமிழ்ப் படங்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்டவற்றிற்கு அவர் குரல் கொடுத்து வந்தார்.

செய்தி வாசிப்பால் அதிகமாக அறியப்பட்டு அழியாப் புகழ்பெற்ற சரோஜ் நாராயண ஸ்வாமியின் மறைவு வானொலி நேயர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com