காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - நாளை தேர்தல்.. தயார்நிலையில் ஏற்பாடுகள்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - நாளை தேர்தல்.. தயார்நிலையில் ஏற்பாடுகள்
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - நாளை தேர்தல்.. தயார்நிலையில் ஏற்பாடுகள்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை நடக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர்.

இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஓட்டு பெட்டிகளும், ஓட்டு சீட்டுகளும் டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் வாக்குரிமை பெற்றவர்கள் ஆவார்கள். ஒவ்வொருவருக்கும் கியூ.ஆர்.கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க செல்ல வேண்டும். முதலில் அவரது பெயர், ஊர், பொறுப்பு உள்ளிட்ட பெயர் விபரம் சரிபார்க்கப்படும். பின்னர் ஒரு ஓட்டுச் சீட்டு வழங்கப்படும். ஓட்டு சீட்டில் முதல் பெயராக மல்லிகார்ஜூன கார்கே பெயர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிடப்பட்டு உள்ளது. 2-வது பெயராக சசிதரூர் பெயர் உள்ளது.

வாக்குச்சீட்டின் அடியில் எந்த மாநிலம், வாக்காளர் பெயர், வரிசை எண், இடம் ஆகிய விவரங்கள் கேட்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும். பின்னர் அந்த கவுண்டர் பாயிலை வாக்காளரிடமே கிழித்து கொடுத்து விடுவார்கள். வாக்குச்சீட்டுடன் வாக்களிக்க மறைவான இடத்துக்கு செல்ல வேண்டும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் முத்திரை மூலம் யாருக்கு ஓட்டுப் போட விருப்பமோ, அந்த பெயருக்கு எதிரே உள்ள இடத்தில் முத்திரை வைத்து ஓட்டுப்பெட்டியில் போட வேண்டும்.

பின்னர் அந்த பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்படும். வாக்கு எண்ணிக்கை வருகிற 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

இதையும் படிக்க: 'இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக அவதூறு பரப்புகிறார்கள்' - திருமாவளவன் பேச்சு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com