\
மே 3-ஆம் தேதி வரை விமான சேவை ரத்து

மே 3-ஆம் தேதி வரை விமான சேவை ரத்து

மே 3-ஆம் தேதி வரை விமான சேவை ரத்து
Published on

மே 3-ஆம் தேதி வரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில். மேலும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். ஏப்ரல் 20க்கு பிறகு சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பால் ரயில் சேவை மே 3-ஆம் தேதி வரை இல்லை என ரயில்வே துறை தெரிவித்தது. இந்நிலையில், தற்போது ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக மே 3 ஆம் தேதிவரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com