தப்புக்கணக்கு போட்ட கணிப்புகள்.. பதிலடி கொடுத்த மக்களவை தேர்தல் முடிவுகள்!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் வென்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கருத்து கணிப்பு
கருத்து கணிப்புபுதியதலைமுறை

கடந்த ஒன்றரை மாதங்களாக, 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியாகின.

மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் வென்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அது என்ன என்று பார்க்கலாம்.

மொத்தமுள்ள 543 இடங்களில் கட்சி வாரியாக..

பாஜக 240 தொகுதிகள்

காங்கிரஸ் 99 தொகுதிகள்

சமாஜ்வாதி 37

திரிணமூல் காங்கிரஸ் 29

திமுக 22

தெலுங்கு தேசம் 16

ஐக்கியஜனதா தளம் 12

சிவசேனா (உத்தவ்) 9

என்சிபி (சரத் பவார்) 8

சிவசேனா (ஷிண்டே) 7

பிற கட்சிகள் 64 இடங்களை வென்றுள்ளன.

இதில் கூட்டணி வாரியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளன.

கருத்து கணிப்பு
பச்சைக்கொடி காட்டிய சந்திரபாபு நாயுடு.. மீண்டும் பதவியேற்கும் மோடி!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொன்னது என்ன?:

ரிபப்ளிக் பிமார்க் கணிப்பின் படி பாஜக கூட்டணி 359 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி154 இடங்களிலும் மற்றவை 30 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தது.

ஜன் கி பாத் கணிப்பின் படி பாஜக கூட்டணி 332-392 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 141-161 இடங்களிலும், மற்றவை 10-20 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தது.

ஏபிபி- சி-ஓட்டர் பாஜக கூட்டணி 353-383 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 152-182 இடங்களிலும், மற்றவை 4-12 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தது.

டைம்ஸ் நவ் - இடிஜி கணிப்பின் படி பாஜக கூட்டணி 358 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 152 இடங்களிலும் மற்றவை 33 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்து இருந்தது.

இந்தியா டுடே - ஆக்சிஸ் கணிப்பின் படி பாஜக கூட்டணி 363-401 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 131-166 இடங்களிலும் மற்றவை 8-20 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்து இருந்தது.

நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பின்படி பாஜக கூட்டணி 400 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 107 இடங்களிலும், மற்றவை 36 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்து இருந்தது.

இதில் கருத்துக்கணிப்பின் படி சராசரியாக பாஜக கூட்டணி 365 இடங்களையும், காங்கிரஸ் இடங்களையும் 146 இடங்களையும் பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளின் படி பாஜக 291 இடங்களையும் காங்கிரஸ் 234 இடங்களையும் மற்றவை 18 இடங்களையும் பிடித்திருந்தது.

பொய்யான கருத்து கணிப்புகள்!

கருத்து கணிப்புகளுக்கு மாறாக பாஜக ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கூட இல்லாமல் கூட்டணிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. மொத்தம் 293 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு போராடி 234 தொகுதிகளை வசப்படுத்தியது. இதனால், மக்களவை தேர்வின் முடிவுகள், தேர்தல் முடிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முற்றிலும் பொய்த்துவிட்டது என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com