மேற்குவங்கம்: துர்கா பூஜா பந்தல்களுக்கு பார்வையாளர்கள் செல்ல தடை

மேற்குவங்கம்: துர்கா பூஜா பந்தல்களுக்கு பார்வையாளர்கள் செல்ல தடை
மேற்குவங்கம்: துர்கா பூஜா பந்தல்களுக்கு பார்வையாளர்கள் செல்ல தடை

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொல்கத்தா உயர்நீதிமன்றம் துர்கா பூஜா பந்தல்களில் பார்வையாளர்களுக்கு தடைவிதித்துள்ளது.

நாளை தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் துர்கா பூஜை திருவிழாவில், பூஜை பந்தல்களில் பார்வையாளர்களை அனுமதிக்க தடைவிதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைப்பாளர்கள் மட்டுமே பந்தல்களின் உள்ளே செல்ல முடியும் என்றும், நுழைய அனுமதிக்கப்பட்ட நபர்களின் பெயர்கள் பந்தலுக்கு வெளியே காட்டப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.21 இலட்சமாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேற்கு வங்கத்தில், துர்கா பூஜை மாநில அரசின் பங்களிப்புடன் ஒவ்வொரு வருடமும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 37,000 துர்கா பூஜை பந்தல்கள் அமைக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com