\

தேர்தல் முடியும்வரை பட்ஜெட் தாக்கலை ஒத்தி வைக்க வேண்டும்.... அகிலேஷ் யாதவ்

தேர்தல் முடியும்வரை பட்ஜெட் தாக்கலை ஒத்தி வைக்க வேண்டும்.... அகிலேஷ் யாதவ்
Published on

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் முடிந்த பிறகே, பட்ஜெட் தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு பிரதமரை உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ்‌ யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதுகுறித்து ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். பட்ஜெட்டில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதை குறிப்பிட்டுள்ள அகிலேஷ் யாதவ், இதனால், அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேசம் பாதிக்கப்படும் என்பதால், பட்ஜெட்டை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com