பெண் போலீசை நடு ரோட்டில் தீ வைத்து எரித்துக் கொன்றவர் உயிரிழப்பு
பெண் காவலரை நடு ரோட்டில் தீவைத்து எரித்துக்கொன்ற, காவலர் அஜாஸ், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கேரள மாநிலம் வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் சவுமியா. இவர் வழக்கம்போல பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடந்து வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. கீழே விழுந்த சவுமியாவை, காரில் இருந்து இறங்கிய இளைஞர் அரிவாளால் வெட்டினார். மேலும், கேனில் எடுத்து வந்த பெட்ரோலை சவுமியா மீது ஊற்றி தீ வைத்தாக தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்து தப்பியோட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்தனர். அதேசமயம் தீயில் கருகிய சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அஜாஸ் அனுமதிக்கப்பட்டார். அப்போது சவும்யா திருமணத்துக்கு மறுத்ததால், கொன்றேன் என்று மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து பணியிலிருந்து அவர் நீக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். “அஜாஸின் இரண்டு கிட்னியும் செயலழிழந்துவிட்டதால், டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. நேற்று அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து உயிரிழந்தார்’’ என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.