விமான நிலைய பாதுகாப்புப் பணி இனி தனியார்மயமா? - பின்னணியும், விளைவுகளும் என்னென்ன?

விமான நிலைய பாதுகாப்புப் பணி இனி தனியார்மயமா? - பின்னணியும், விளைவுகளும் என்னென்ன?
விமான நிலைய பாதுகாப்புப் பணி இனி தனியார்மயமா? - பின்னணியும், விளைவுகளும் என்னென்ன?

விமான நிலையம் பாதுக்காப்பு பணிகளை தனியார்மயமாகும் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. CISF வீரர்களை நீக்கிவிட்டு, அவர்களின் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

விமான நிலைய பாதுகாப்பில் தனியார் தலையீடு இருந்தால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனப் பல சமூக ஆர்வலர்கள் இந்தியாவில் விமான நிலையங்கள் மூலம் நடந்த சம்பவங்களை நினைவு கூறுகிறார்கள்.

அந்த வகையில் கந்தகார் விமான கடத்தல் நினைவுக்கு வருகிறது. ’’1999ல், காத்மாண்ட் நகரிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், ஐ.சி.- 814 லக்னோ மீது பறந்து கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட விமானத்தை விட வேண்டும் என்றால், ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு, தீவிரவாதிகளை விடுவித்தது. அதனை தொடர்ந்து இந்திய விமானத்தைத் தீவிரவாதிகள் விடுவித்தனர்.

இதுபோன்று பயங்கர வாதிகளும், தீவிரவாதிகளும் விமான நிலையங்கள் மற்றும் விமானங்கள் மூலமாக தான் பல சதிச் செயல்களுக்குத் திட்டம் வகுக்கிறர்கள். மேலும் போதைப் பொருள் கடத்தல் விமானங்கள் மூலமாகவும் அதிகமாக நடக்கிறது.எனவே, நாட்டின் பாதுகாப்பைத் தனியாரிடம் ஒப்படைப்பது மிகுந்த ஆபத்து நிறைந்தது. அதற்கான தேவையும் இல்லை என்ற போது எதற்கான இந்த திட்டம்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

BCAS-ன் திட்டம் என்ன? ( Bureau of Civil Aviation Security )

ஸ்மார்ட் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் படி, விமானப் பாதுகாப்புக் கட்டுப்பாடு பணியகத்தின் திட்டமானது, ‘மொத்தம் 3,049 CISF விமானப் பாதுகாப்புப் பணியிடங்கள் அகற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இவர்களுக்குப் பதிலாக 1,924 தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பேக்கேஜ் ஸ்கேனர்கள் போன்ற ஸ்மார்ட் கண்காணிப்பு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய பாதுகாப்பு கட்டமைப்பானது விமானத் துறையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவதற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், தற்போதுள்ள மற்றும் புதிய விமான நிலையங்களில் அதிகரித்து வரும் விமான பாதுகாப்பு கடமை தேவைகளை பூர்த்தி செய்ய சிஐஎஸ்எஃப்-க்கு மனிதவள ஊக்கத்தை அளிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கையால் விமான நிலைய ஆபரேட்டர்களுக்கான விமானப் பாதுகாப்புச் செலவும் சீராகும்.

மேலும் CISF பணியாளர்களுக்குப் பதிலாக தனியார் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிப்பதால் செலவுகள் குறைக்கப்படும், தற்போதுள்ள விமான நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் சுமையை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் வரவிருக்கும் புதிய விமான நிலையங்களுக்கும் இந்த பாதுக்காப்பு விசயங்கள் பயன்படும் என்கிறது சிவில் விமான பாதுகாப்பு பணியகம்.

அரசு என்ன சொல்கிறது?

டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில், வரிசை மேலாண்மை, விமான ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு உதவி, முனையப் பகுதிக்குள் சில நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை நிர்வகிப்பது போன்ற பணிகளுக்கு தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மற்றவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பயிற்சி பெற்ற CISF மற்றும் தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப கருவிகள் என விமான நிலையங்களைக் கூடுதல் பாதுகாப்புடன் புதுப்புகிறோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com