புதிய இந்தியாவின் சாதனைகள் - குஜராத் கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோடி!

புதிய இந்தியாவின் சாதனைகள் - குஜராத் கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோடி!
புதிய இந்தியாவின் சாதனைகள் - குஜராத் கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோடி!

போக்குவரத்து விமானங்களை உற்பத்தி செய்யும் முக்கிய நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ள நிலையில், அங்கு வதோதரா பகுதியில் சி-295 விமான உற்பத்தி நிலையத்துக்கு அவர் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி விமான உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “இந்தியா உலகிற்கு ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாறி வருகிறது. உலகளாவிய விமானப்போக்குவரத்து மையமாக இந்தியா தனது அடையாளத்தை உருவாக்கும். 'மேக் இன் இந்தியா' என்று தயாரிக்கப்படும் பயணிகள் விமானத்தை இந்தியா நேரில் பார்க்க போகிறது. இன்று இந்தியா விமானங்கள், பீரங்கி வண்டிகள், கார்கள், மொபைல் போன்கள், உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் தடுப்பூசிகள் என பலவற்றை தயாரித்து வருகிறது. உடான் திட்டம் நமது விமானப்போக்குவரத்து துறைக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.

வரும் ஆண்டுகளில், இந்தியாவுக்கு 2,000 விமானங்கள் தேவைப்படும். இந்த உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய இன்று நாம் ஒரு படி எடுத்துள்ளோம். புதிய இந்தியா, உற்பத்தித்துறையில் தரத்தை உறுதி செய்யும். அதே வேளையில் போட்டிச்சூழலில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் முதலீடு செய்துள்ளன. விண்வெளி துறையில் மட்டும் மூன்று பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக இந்தியா சேவைத்துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று உலகம் நம்பியது. ஆனால் இன்று, சேவைத்துறையில் முன்னேறி வருகிறோம். அதே போல் உலகின் மிகப்பெரிய உற்பத்தித் துறையாகவும் வளர்ந்து வருகிறோம். தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்றுமதி மேம்படுத்தும். வரும் ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறைகள் இரண்டு முக்கிய தூண்களாக இருக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com