\
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை: சிதம்பரத்திற்கு சிக்கலா?

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை: சிதம்பரத்திற்கு சிக்கலா?

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை: சிதம்பரத்திற்கு சிக்கலா?
Published on

ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை அக்டோபர் 26ஆம் தேதி நடத்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் ‌நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ரூ.600 கோடி வரை முதலீடு செய்ய மத்திய நிதி அமைச்சகத்தால் அனுமதி அளிக்க முடியும் என்ற நிலையில், விதிகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதில் அனுமதி பெற்றுகொடுக்க கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறையும், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வ‌ழக்கை சிபிஐயும் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்தக் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். 

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த மாதம் 26ஆம் தேதி ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேர் மீதான விசாரணையை நடத்த பாட்டியாலா நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com