இந்தியா
தொடர்ந்து காற்று வீசுவதால் டெல்லியில் குறையும் காற்றின் மாசு
தொடர்ந்து காற்று வீசுவதால் டெல்லியில் குறையும் காற்றின் மாசு
தலைநகர் டெல்லியின் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களாக மிக மோசமான சூழலில் இருந்து வந்த நிலையில், அங்கு தொடர்ந்து காற்று வீசி வருவதால் தானாகவே காற்றின் மாசு சற்று குறைந்து வருகிறது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் மெல்லிய காற்று வீசி வருகிறது. இதனால் காற்றிலுள்ள தூசு மெல்ல அடித்துச் செல்லப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடுத்து காற்றின் தரம் தற்பொழுது 307 ஆக உள்ளது.
நேற்று முன்தினம் இந்த அளவு 349 என இருந்தது. இன்னும் தொடர்ந்து காற்று வீசுவது நீடித்தால் காற்றின் தரம் மேலும் உயரும் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காற்றின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
- நிரஞ்சன் குமார்