டெல்லி: தொடர்ந்து 3வது நாளாக மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்

டெல்லி: தொடர்ந்து 3வது நாளாக மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
டெல்லி: தொடர்ந்து 3வது நாளாக மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை நாளிலிருந்து தலைநகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகின்றது. அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதாலும் நிலைமை படுமோசமாக காணப்படுகிறது. தற்போது பனிமூட்டமும் நிலவுவதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா கேட், பாரபுல்லா, விமான நிலையப் பகுதி, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. காற்றின் தரக்குறியீடு 432ஆக பதிவாகி உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com