இவ்வளவு வித்தியாசமா? - இந்தியாவில் குறைந்த காற்று மாசு: புகைப்படங்களை ஒப்பிட்ட நாசா!

இவ்வளவு வித்தியாசமா? - இந்தியாவில் குறைந்த காற்று மாசு: புகைப்படங்களை ஒப்பிட்ட நாசா!

இவ்வளவு வித்தியாசமா? - இந்தியாவில் குறைந்த காற்று மாசு: புகைப்படங்களை ஒப்பிட்ட நாசா!
Published on

வட மாநிலங்களில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு குறைந்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

கொரோனா பரவத் தொடங்கியதுமே உலக நாடுகள் எடுத்த முதல் தற்காப்பு ஆயுதம் ஊரடங்கு தான். இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு
அமலானது. பின்னர் மே3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் இல்லை. பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மனிதர்கள் கூட்டம் நிரம்பி வழியும் பல இடங்கள் இன்று வெறிச்சோடி இருக்கின்றன.

இப்படி கொரோனாவால் மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நேரத்தில் இயற்கை தன்னை மீட்டுக்கொண்டுள்ளது. வாகன புகை,
தொழிற்சாலை புகை என காற்று மாசால் நிரம்பும் இந்தியா தற்போது தூய்மையான காற்றை வீசிக்கொண்டு இருக்கிறது. அதிக காற்று
மாசுல்ல நகரங்கள் எனக் கூறப்பட்ட இடங்கள் எல்லாம் இன்று தரமான காற்றுள்ள நகரம் என்ற தரக்குறியீட்டை பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் நாசா வெளியிட்டுள்ள புகைப்படம் இந்தியாவில் எந்த அளவுக்கு காற்று மாசு குறைந்திருக்கிறது என்பதை தெளிவாக
காட்டுகிறது. குறிப்பாக டெல்லியில் காற்று மாசு கடந்த ஆண்டு நாளுக்கு நாள் மிகுந்த அபாய கட்டத்திற்கு சென்றிருந்தது. ஊரடங்கால்,
தற்போது வட மாநிலங்கள் முழுவதும் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாசு வெகுவாக குறைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது நாசா.

இது தொடர்பாக ட்விட்டரில் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டு, எந்த அளவுக்கு மாசு குறைந்திருக்கிறது என்பதையும் நாசா
ஒப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com