அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என குஜராத் சுகாதாரத் துறை செயலாளர் தனஞ்செய் திவேதி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் யக்னேஷ் தேவ், ரூபானி விமானத்தில் பயணிக்கத் திட்டமிட்டிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது தற்போதைய நிலை இன்னும் தெரியவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். விமான அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், பயணிகளின் பட்டியலில் 12 ஆவது பயணியாக ரூபானியின் பெயர் பெயரிடப்பட்டுள்ளது. ரூபானிக்கு நெருக்கமான வட்டாரங்கள் லண்டனில் உள்ள அவரது மனைவி அஞ்சலி ரூபானியை அழைத்து வருவதற்காக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
விமான நிபுணர்கள் விபத்து குறித்து கூறுகையில், “முதற்கட்ட பார்வையில் பல பறவைகள் மோதியதால் இரு இன்ஜின்களும் மின்சாரத்தை இழந்திருக்கலாம். take-off மிகச்சரியாக இருந்தது. ஆனால், கியரை மாற்றுவதற்கு முன்பே விமானம் கீழிறங்கத் தொடங்கியது. இது இயந்திரம் தனது சக்தியை இழந்தாலோ அல்லது விமானம் மேலேறுவதை நிறுத்தினாலோ மட்டுமே நிகழும்” எனத் தெரிவிக்கின்றனர்.
இந்த விமான விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு பிரிவு (Aircraft Accident Investigation Bureau) விசாரிக்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். AAIB இயக்குநர் ஜெனரல் மற்றும் நிறுவனத்தின் புலனாய்வு இயக்குநர் உள்ளிட்டோர் அகமதாபாத்திற்குச் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து தொடர்பாக போயிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தின் ஆரம்பக்கட்ட சம்பவங்கள் குறித்து தெரியும் என்றும் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் கேப்டன் சுமித் சபர்வால் என்பரால் இயக்கப்பட்டது. இவர் 8,200 மணிநேரம் விமானத்தினை இயக்கியுள்ள அனுபவமுள்ளவர். துணை விமானியாக இருந்த கிளைவ் குந்தருக்கு 1100 மணி நேரம் விமானத்தினை இயக்கிய அனுபவம் இருக்கிறது.
பரபரப்பான தகவலாக விபத்திற்குள்ளான விமானத்தின் விமானி அகமதாபாத்திலுள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு மேடே அழைப்பு விடுத்துள்ளார். Mayday அழைப்பு என்பது முதன்மையாக விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் சூழல்களில் பயன்படுத்தப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அவசரகால பேரிடர் சமிக்ஞையாகும். இது விமானம் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்பதைக் குறிப்பதாகும்.
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) மூன்று குழுக்களாக பணியாற்றி வருகின்றனர்.
The tragedy in Ahmedabad has stunned and saddened us. It is heartbreaking beyond words. In this sad hour, my thoughts are with everyone affected by it. Have been in touch with Ministers and authorities who are working to assist those affected.
— Narendra Modi (@narendramodi) June 12, 2025
விமான விபத்து தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விமான விபத்து நம்மை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் நொறுங்கியது. களத்தில் இருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விபத்து நிகழ்ந்தது தொடர்பாக FlightRadar எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, “விமானம் அதிகபட்சமாக 625 அடி உயரத்தை (விமான நிலையத்தின் உயரம் சுமார் 200 அடி) எட்டியபின், நிமிடத்திற்கு -475 அடி செங்குத்து வேகத்தில் கீழே இறங்கத் தொடங்கியது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் என்ற விமானம் நீண்ட பயணங்களுக்கு ஏற்ற அதிகம் விற்பனையான விமானங்களில் ஒன்று. விமான கண்காணிப்பு தளமான FlightRadar24 இன் படி, விபத்திற்குள்ளான விமானம் 2014 இல் ஏர் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
விமான விபத்தை நேரில் கண்டவர் கூறியது என INDIAtv செய்தி வெளியிட்டுள்ளது. அதில் விமான விபத்தினை நேரில் கண்டவர் கூறுகையில், “நான் வீட்டில் இருந்தபோது ஒரு பெரிய சத்தம் கேட்டது. என்ன நடந்தது என்று பார்க்க நாங்கள் வெளியே சென்றபோது, காற்றில் அடர்த்தியான புகை மண்டலம் இருந்தது. நாங்கள் இங்கு வந்தபோது, விபத்துக்குள்ளான விமானத்தின் குப்பைகள் மற்றும் சடலங்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தன” எனத் தெரிவித்துள்ளார்.
Air India confirms that flight AI171, from Ahmedabad to London Gatwick, was involved in an accident today after take-off.
— Air India (@airindia) June 12, 2025
The flight, which departed from Ahmedabad at 1338 hrs, was carrying 242 passengers and crew members on board the Boeing 787-8 aircraft. Of these, 169 are…
ஏர் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது.
அகமதாபாத்திலிருந்து மதியம் 13.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் நாங்கள் அமைத்துள்ளோம்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் விபத்திற்குள்ளானதை அடுத்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்று விமானத்தில் பிரிட்டனைச் சேர்ந்த 52 பேர் பயணம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அகமதாபாத்-லண்டன் கேட்விக் செல்லும் விமானம் AI171, இன்று, ஜூன் 12, 2025 விபத்திற்குள்ளானது. மேலதிக விபரங்களை உறுதி செய்து வருகிறோம். கூடுதல் தகவல்களை airindia.com மற்றும் எங்கள் X தளத்தில் பகிர்ந்து கொள்வோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி விமானப் போக்குவரத்து துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டுள்ளார்.
குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்து..
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 12, 2025
விமானம் வெடித்துச் சிதறும் காட்சி#Gujarat | #Ahmedabad | #FlightAccident pic.twitter.com/oNYAJ965CA
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமான விபத்து தொடர்பாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசியுள்ளார். மேலும், மத்திய அரசின் உதவியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலில் ரூபானி விஜய் ராம்னிக்லால் என்ற பெயர் உள்ளது. இவர் குஜராத்தின் 16 ஆவது முதலமைச்சராக 2016 முதல் 2021 வரை செயல்பட்டவர்...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கிப் புறப்பட்ட நிலையில் சில நொடிகளில் விபத்திற்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகைகள் கிளம்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
விமான கண்காணிப்பு சேவையான Flightradar24இன் தரவுகளின் படி, விமானம் ஓடுபாதையை விட்டு வெளியேறிய சில வினாடிகளில் மணிக்கு சிக்னலை இழந்தது. 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்த பயணிகளின் நிலை முழுமையாகத் தெரியாத நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.