
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா விமானம் முழுக்கப் பெண்களை கொண்டு இயக்கப்பட்டது.
பல்துறையிலும் சாதனை படைத்து வரும் மகளிரைப் போற்றும் வகையில், மகளிர் தினத்தையொட்டிய சிறப்பு சேவையாக கொல்கத்தாவில் இருந்து திமாபூர் வரையில் விமானி முதல் சிப்பந்திகள் வரை அனைத்துப் பணிகளிலும் பெண்களைக் கொண்டு இயக்கப்பட்டது. ஏர்இந்தியா பொது மேலாளர் நவ்நீத் சித்து கொடியசைத்து இந்தச் சிறப்புச் சேவையைத் தொடக்கி வைத்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
உலகிலேயே முதல் முறையாக 1985 ஆம் ஆண்டு பெண்களை கொண்டு கொல்கத்தா முதல் சில்சார் வரை ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தை இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.