இந்தியா
இந்தியா-துபாய் இடையே விமானங்களை இயக்க ஏர் இந்தியாவுக்கு தடை
இந்தியா-துபாய் இடையே விமானங்களை இயக்க ஏர் இந்தியாவுக்கு தடை
இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு 15 நாட்கள் தடை விதித்து துபாய் விமான போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர் பயணம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும் என துபாய் விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு துபாய் சென்ற இரண்டு நபர்களுக்கான தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட மருத்துவச் செலவுகளை ஏற்கவும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.