கருப்புப்பெட்டி
கருப்புப்பெட்டி fb

அகமதாபாத் விமான விபத்து... சேதமடைந்ததா கருப்புப்பெட்டி?

ஏர் இந்தியா விமானம் மருத்துவ கல்லூரி விடுதியில் மோதி விபத்து ஏற்பட்டநிலையில் , 33 பேர் உட்பட மொத்தம் 274 பேர் மரணம் அடைந்தனர்.
Published on

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. கடந்த 12 ஆம் தேதியன்று, ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். 1 பயணி மட்டும் உயிர் பிழைத்தார். இந்நிலையில் , விமானம் மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியநிலையில், 33 பேர் உட்பட மொத்தம் 274 பேர் மரணம் அடைந்தனர்.

ஆனால், விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து தற்போதுவரை தெரியவில்லை. இதற்கான பதில் கருப்பு பெட்டியிலிருந்து மட்டுமே கிடைக்கும் என்று கூறுகின்றனர். விமான விபத்து நடந்த 28 மணி நேரத்திலேயே ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்கப்பட்டது.

இதில் ‘காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர் (சிவிஆர்) மற்றும் பிளைட் டேட்டா ரிக்கார்டர் (எப்டிஆர்) என்ற இரு சாதனங்கள் இருக்கும். சிவிஆர் சாதனத்தின் விமான அறையில் நடைபெற்ற உரையாடல்கள் பதிவாகும்.

கருப்புப்பெட்டி
விமான விபத்து நடவடிக்கை | 15% சர்வதேச சேவைகளைக் குறைக்கும் ஏர் இந்தியா!

எப்டிஆர் சாதனத்தின் விமானம் பறந்த உயரம், வேகம், விமானி இயக்கிய விதம் உட்பட ஏராளமான தகவல்கள் சுமார் 25 மணி நேரத்துக்கு பதிவாகும். இந்த தகவல் பெறப்பட்டால் விமான விபத்துக்கான சரியான காரணம் தெரிந்துவிடும்.

இந்தவகையில், மீட்கப்பட்ட கருப்புப்பெட்டி ஆய்வுக்காக டெல்லியில் உள்ள கருப்பு பெட்டி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. ரூ.9 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த நவீன ஆய்வு மையம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி திறக்கப்பட்டது.

ஆனால், NDTV யில் வெளியாகியிருக்கும் தகவலின்படி இந்த கருப்புப்பெட்டியின் வெளிப்புறப்பகுதி சேதம் அடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டி சேதம் அடைந்திருப்பதால், அதில் பதிவான தகவல்களை பெற முடியவில்லை.

கருப்புப்பெட்டி
HEADLINES|இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் முதல் கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் விட்ட தயாநிதி வரை

இந்நிலையில், இதை சரிசெய்ய அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் ஆய்வு மையத்திற்கு அனுப்படுமா, லக்னோவிற்கு அருகிலுள்ள HAL , அல்லது சிங்கப்பூருக்கு அனுப்பப்படுமா என்று மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர் (சிவிஆர்) மற்றும் பிளைட் டேட்டா ரிக்கார்டர் (எப்டிஆர்) ஆகியவற்றில் பதிவான தகவல்கள் பைனரி வடிவத்தில் சேமிக்கப்படுகிறது. இந்தத் தரவு ஒரு பொறியியல் வடிவமாக மாற்றப்பட வேண்டும், அதன் பிறகுதான் அதிலிருந்து தகவல்களை எடுக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com