\
'லேண்டிங் கியரில்' பிரச்னை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

'லேண்டிங் கியரில்' பிரச்னை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

'லேண்டிங் கியரில்' பிரச்னை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
Published on

அசாமில் விமானத்திலிருந்து பழுது உடனடியாக கண்டறிந்து தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அசாம் மாநிலம் சில்சாரிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் லேண்டிங் கியர் ஒன்று பழுதடைந்தது. இதனை கண்டறிந்ததால் நல்வாய்ப்பாக விமானம் புறப்பட்ட உடனேயே தரையிறங்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. ஏர்பஸ் ஏ319 என்ற இந்த விமானம் ஒரு குறுகிய முதல் நடுத்தர வகையைச் சேர்ந்தது. 124 முதல் 156 பயணிகள் பயணிக்கும் வசதி கொண்டது.

முன்னதாக அக்டோபர் 22 ஆம் தேதி, பயணி ஒருவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், டெல்லி நோக்கிச் சென்ற விஸ்தாரா விமானம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com