ஒரு நாள் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சமாக உயர்த்தப்படும்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

ஒரு நாள் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சமாக உயர்த்தப்படும்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

ஒரு நாள் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சமாக உயர்த்தப்படும்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

"இந்தியாவில், ஒரு நாள் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சமாக உயர்த்தப்படும்" என்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக தனது கோர தாண்டவத்தை காட்டிவருகிறது. அதேநேரம் ஒருசில இடங்களில் கொரோனா எண்ணிக்கை கட்டுக்குள் வருவதை முன்னிறுத்தி, அது குறைந்தும் வருவதாக மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. அதில் முக்கியமான ஒரு மாநிலம், டெல்லி. டெல்லியில் கடந்த சில தினங்களாக எண்ணிக்கை குறைவாக பதிவாவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான காரணமாக, கொரோனா பரிசோதனைகள் குறைவாக்கப்படதே காரணம் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது

இன்று டெல்லியிலுள்ள சஃப்டார்ஜுங் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஆக்சிஜன் உற்பத்திக்கான இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை தொடர்ந்து, பரிசோதனை எண்ணிக்கையை ஒரு நாளுக்கு 25 லட்சம் என அதிகரிப்போம்” என உறுதியளித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 32,03,01,177 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவற்றில் கடந்த ஒருநாளில் மட்டும் (மே 18ம் தேதி) 20,08,296 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “நேற்று ஒருநாளில் நாங்கள் செய்த பரிசோதனை, இதுவரை 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் மிக அதிகமான ஒன்று. 20 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் 25 லட்சம் பரிசோதனைகள் என உயர்த்தப்படும்” எனக்கூறியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “இந்தியாவில் பல மாநிலங்களில் இரண்டாவது அலை கொரோனா குறைவாக தெரியவந்துள்ளது. அதற்கு காரணம் பல மாநிலங்களில் கொரோனா பரிசோதனைகள் குறைவாக இருக்கிறது. இந்தியாவில் கிராமப்பகுதிகள் அதிகமாக பாதிப்பு வெளிவரத்தொடங்கியுள்ளது. குறைவான சோதனையிலேயே அதிகமாக பாதிப்பு இந்தியாவில் உறுதிசெய்யப்படுகிறது எனில், அதிகப்படியான கொரோனா பரிசோதனைகள் செய்தால், அது இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். ஆகவே சோதனைகள் வேகமாக அதிகரிக்கப்பட வேண்டும். ” எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com