முதல் பிளாஸ்டிக் சர்ஜரியை செய்தது மஹரிஷி சுஷ்ருதாவா? டெல்லி எய்ம்ஸ் ஆய்வு!

முதல் பிளாஸ்டிக் சர்ஜரியை செய்தது மஹரிஷி சுஷ்ருதாவா? டெல்லி எய்ம்ஸ் ஆய்வு!
முதல் பிளாஸ்டிக் சர்ஜரியை செய்தது மஹரிஷி சுஷ்ருதாவா? டெல்லி எய்ம்ஸ் ஆய்வு!

எய்ம்ஸ் சார்பில் 3,000 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. `இந்திய மருத்துவத்தின் தந்தை’ மற்றும் `ப்ளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை’ என்று அழைக்கப்படும் மஹரிஷி சுஷ்ருதாவின் அறுவை சிகிச்சை வழிமுறை பற்றிதான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள AIIMSன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை, தற்போதுள்ள சமீபத்திய மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் சுஷ்ருதாவின் பதிவுசெய்யப்பட்ட பழமையான அறுவை சிகிச்சை ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள பிளாஸ்டிக் சர்ஜரி துறை சார்பில் தற்போதுள்ள அறுவை சிகிச்சை முறை குறித்தும், பழங்காலத்தில் சுஷ்ருதா செய்த அறுவை சிகிச்சை குறித்தும் ஒப்பீடு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இந்த அய்வுக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்த ஆய்வு பற்றி டெல்லி எய்ம்ஸ்-ன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் மனிஷ் பேசுகையில், `சுஷ்ருதாவின் காலகட்டத்தில் மொத்தம் 150 வகையான அறுவை சிகிச்சை வகைகள் இருந்துள்ளன. அறுவை சிகிச்சைக்கு இன்று உள்ள எவ்வித உபகரணங்களும் இல்லாத அந்த காலகட்டத்தில், எப்படி அத்தனை வகைகள் சாத்தியமானது என்பதை அறிய உள்ளோம். அந்த காலத்தில் இருந்த உபகரணங்கள், சிறந்தவையாகவோ அதிநவீனமாகவோ இருந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் கத்தி, ஊசி, குறடு உள்ளிட்ட கூர்மையான பொருட்களை அவர்கள் உபயோகித்துள்ளனர். கூடவே நூல்களும் பயன்படுத்தி உள்ளனர். இவற்றையெல்லாம் கொதிக்க வைத்து, நோய்க் கிருமிகளை ஒழிக்கும் பணியை (Sterilisation) மேற்கொண்டுள்ளனர்.

ஆயுர்வேத நிபுணர்களின் கணிப்புப்படி, சுஷ்ருதாவின் மருத்துவத்தில் 184 பாடங்கள் குறித்தும், 1,120 நோய்கள் குறித்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் `700 வகையான செடிகள் இந்த அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 12 வகையான எலும்பு முறிவுக்கும், 7 வகையான எலும்பு இடப்பெயர்வுகள் சார்ந்த விஷயங்களுக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவையாவும் எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட், ஸ்கேன் போன்றவை இல்லாத காலத்திலும் செய்யப்பட்டிருக்கிறது’ என்றும் கூறப்படுகிறது.

சில ஆயுர்வேத நிபுணர்களின் கணக்குப்படி உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி கிட்டத்திட்ட 2,500 ஆண்டுகளுக்கு முன் மகரிஷி சுஷ்ருதாவால் காசியில் மேற்கொள்ளப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com