இந்தியா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் டிஸ்சார்ஜ் - எய்ம்ஸ் மருத்துவமனை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் டிஸ்சார்ஜ் - எய்ம்ஸ் மருத்துவமனை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இதையடுத்து அவர் கொரோனாவிலிருந்து மீண்டு குணமடைந்தார். ஆனால் தொடர்ந்து அவருக்கு உடல்சோர்வு உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த 17ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து தற்போது அமித்ஷா நலமுடன் இருப்பதாகவும், ஓய்வும் சிறப்புக் கவனமும் தேவைப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே அமைச்சக பணிகளை அவர் கவனிப்பார் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமித்ஷா குணமடைந்து விட்டார் எனவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.