“கொரோனா 2-வது அலையை நோக்கி இந்தியா செல்கிறது” - எய்ம்ஸ் இயக்குநர்

“கொரோனா 2-வது அலையை நோக்கி இந்தியா செல்கிறது” - எய்ம்ஸ் இயக்குநர்
“கொரோனா 2-வது அலையை நோக்கி இந்தியா செல்கிறது” - எய்ம்ஸ் இயக்குநர்

கொரோனா 2-வது அலையை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருக்கிறது என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை தாக்கிய நிலையில் 2021 ஆம் ஆண்டு கொரோனா 2வது அலையை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. 2வது அலை உருவாக நாம்தான் காரணம். இந்தியாவில் கொரோனா இல்லை என நினைத்து விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. தினமும் 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால்தான் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் மேலும் 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு மேலும் 172 பேர் உயிரிழந்தனர். தினந்தோறும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை 100-க்குள் இருந்து வந்த நிலை மாறி உள்ளது. கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு நாளும் இறந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com