இந்தியா
நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் 11ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் 11ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்குள் குரல் எழுப்பிய அதிமுக எம்.பிக்கள், பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் 11ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் வரிசையாக நின்று, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தும் வகையில் பதாகைகளையும் எம்.பி.க்கள் ஏந்தியிருந்தனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட பிறகு தினமும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.