காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பிக்களின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது.
மாநிலங்களவை இன்று கூடியதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். ‘அமைத்திடுக.. அமைத்திடுக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக’ என மாநிலங்களவையில் எம்.பிக்கள் முழக்கமிட்டனர். மைத்ரேயன் தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் அவைத்தலைவர் மேசையை சூழ்ந்தனர். எம்.பிக்களின் தொடர் முழக்கம் காரணமாக அவை அமளி நிலவியது. அதேபோல் ஆந்திராவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிறப்பு நிதி உதவித் தேவை என வலியுறுத்தி மாநிலங்களவையில் முழக்கமிட்டனர்.