இனி 3-ஆம் வகுப்பு முதல் AI பாடத்திட்டம் அறிமுகம்.. மத்திய கல்வித்துறை அமைச்சகம் அதிரடி!
மனிதன் உருவான காலத்திலிருந்து பல யுகங்களை கடந்து வரும்போதும் ஒவ்வொரு வளர்ச்சியை அடைந்து வருகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் புதிதாக உருவாகி கொண்டே இருக்கும் அதற்கேற்ப மனிதர்களும் தங்களை தயார்படுத்திக்கொள்வது அவசியம். கம்ப்யூட்டர் காலம், இன்டர்நெட் காலம், சோசியல் மீடியா காலம், என்று ட்ரெண்டுக்கு ஏற்றவாறு மக்களால் சொல்லப்படுவது உண்டு அந்த வகையில் மனிதர்களுக்கு சவாலாக உருவாக்கப்பட்டது தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் artificial inteligence அதாவது AI தொழில்நுட்பம்..
தற்போது மிகவும் பிரபலமாகி வரும் இந்த தொழில்நுட்பம் அணைத்து துறைகளிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர் இத்தகைய தொழில்நுட்பத்தை ஆரம்பகால கல்வியிலிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.. இந்த AI படிப்பு இனி பள்ளிக்குழந்தைகள் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே Artificial Intelligence கற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற செய்திதான் பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.
காரணம் மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருக்கும் இந்த திட்டம், எதிர்கால இந்திய மாணவர்களை டிஜிட்டல் யுகத்திற்குத் தயார்படுத்தும் முக்கிய முயற்சி எனக் கருதப்படுகிறது.
அதாவது மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருப்பதன்படி, 2026–27 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு AI பற்றிய பாடத்திட்டம் கட்டாயமாக சேர்க்கப்படுகிறது.
இதற்கான பாடத்திட்டம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பேரவை (NCERT) மூலம் உருவாக்கப்படுகிறது.மாணவர்களின் வயது மற்றும் கற்றல் நிலைக்கு ஏற்ப அடிப்படை தரத்தில் AI என்றால் என்ன?, ரோபோட்கள் எப்படி இயங்குகின்றன?, மெஷின் லெர்னிங் என்றால் என்ன? போன்ற எளிமையான விளக்கங்களுடன் தொடங்கி, மேல் தரங்களில் டேட்டா அனலிசிஸ், கோடிங், AI எதிக்கல் யூஸ் போன்ற ஆழமான கருத்துக்களும் சேர்க்கப்படும்.
“இன்றைய உலகில் AI என்பது ஒரு தொழில்நுட்பம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
மாணவர்கள் அதை ஆரம்பத்திலேயே கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் உலக அளவில் இந்தியாவை முன்னணியில் நிறுத்த முடியும்.”
அதாவது, குழந்தைகள் சிறு வயதிலிருந்தே சிந்திக்கும் திறன், பிரச்சினை தீர்க்கும் திறன், மற்றும் டிஜிட்டல் திறமை வளர்க்கும் நோக்கத்தில்தான் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது.
3–5 ஆம் வகுப்பு வரை – AI அடிப்படை விளக்கங்கள், விளையாட்டுத் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
6–8 ஆம் வகுப்பு வரை – சிறு ரோபோட்கள், Coding blocks, logical games. பாடங்கள் இருக்கும்
9–12 ஆம் வகுப்பு வரை – Machine Learning, Data Science, AI Ethics, Real-world Projects. ஆகியவை இடம்பெறும்
இதற்காக AI Labs, Digital Classrooms, Teacher Training Programmes ஆகியவை நாடு முழுவதும் அமைக்கப்பட உள்ளன.
மாணவர்களின் டிஜிட்டல் திறன்கள் அதிகரிக்கும்போது
இந்திய மாணவர்கள் Global Tech நிறுவனங்களில் முன்னணி பங்குகள் வகிப்பார்கள்.
எதிர்காலத்தில் AI அடிப்படையிலான தொழில்கள் உருவாகும் போது, இந்தியாவே முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது

