ஹாங்காங்கில் விபத்தில் தப்பிய விமானம்: ஏர் இந்தியா விமானிகள் நீக்கம்!

ஹாங்காங்கில் விபத்தில் தப்பிய விமானம்: ஏர் இந்தியா விமானிகள் நீக்கம்!

ஹாங்காங்கில் விபத்தில் தப்பிய விமானம்: ஏர் இந்தியா விமானிகள் நீக்கம்!
Published on

டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஹாங்காங்கில் பெரும் விபத்தில் சிக்க நேர்ந்ததால் அதன் இரண்டு விமானிகள் பணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று ஹாங்காங் சென்றது. விமானத்தில் 10 விமான பணியாளர்கள் உட்பட 197 பயணிகள் இருந்தனர். ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக சீரான உயரத் தில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென சரசரவென்று வேகமாக கீழே இறங்கியது. 

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தரைக்கு அருகில் வந்ததை குறிக்கும் எச்சரிக்கை மணி அடித்ததை அடுத்து, கடல் மட்டத்தில் இருந்து 200 அடி உயரத்துக்கு விமானத்தை விமானிகள் மேலே பறக்கச் செய்தனர். அதாவது ரன்வே-யில் இருந்து 2.6 நாட்டிக்கல் மைல் உயரத்துக்கு விமானம் சென்றது. 

பின் அங்கு வட்டமடித்துவிட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. கொஞ்சம் தவறியிருந்தாலும் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கும் என்று கூறப்பட்டது. 

இதையடுத்து இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த விசாரணை அறிக்கையில் விமானியின் தவறுதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டதை அடுத்து 2 விமானிகளும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக ஏர் இந்தி யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com