நித்தியானந்தா ஆசிரமம் மீதான புகார்: இரு பெண் உதவியாளர்கள் கைது?

நித்தியானந்தா ஆசிரமம் மீதான புகார்: இரு பெண் உதவியாளர்கள் கைது?
நித்தியானந்தா ஆசிரமம் மீதான புகார்: இரு பெண் உதவியாளர்கள் கைது?

நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக பெண் குழந்தைகள் அடைக்கப்பட்டிருக்கும் புகாரில் இரண்டு பெண் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள தங்களது இரண்டு மகள்களை மீட்டுத்தருமாறு பெங்களூருவை சேர்ந்த பெற்றோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.அவர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், கடந்த 2013-ஆம் ஆண்டு தங்களின் நான்கு பெண் குழந்தைகளை பெங்களூருவில் நித்தியானந்தா நடத்திவரும் கல்வி நிறுவனத்தில் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளனர். 

அதன் பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நான்கு குழந்தைகளையும் அகமதாபாத்தில் உள்ள கல்வி நிறுவனத்திற்கு நிர்வாகம் அனுப்பிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். குழந்தைகளை பார்க்க அகமதாபாத் சென்றபோது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் உதவியுடன் இரண்டு பெண் குழந்தைகளை மீட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் இரண்டு பெண் குழந்தைகளை மீட்டுத்தருமாறு பெற்றோர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே, பெற்றோரின் புகாரை அடுத்து நித்தியானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக அகமதாபாத் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தா ஆசிரமத்தின் பெண் உதவியாளர்கள் இருவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com