வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்காணிக்க ட்ரோன் கேமரா

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்காணிக்க ட்ரோன் கேமரா
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்காணிக்க  ட்ரோன் கேமரா

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்காணிக்க ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தியுள்ளனர்.

கொரோனாவை தொடர்ந்து அடுத்ததாக உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கும் பிரச்னை வெட்டுக்கிளிகள். இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு இருக்கும் என ஐநா எச்சரித்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர், ஒடிசா உள்ளிட்டப் பல இடங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு வரத் தொடங்கியது.

சென்னை: ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை கண்காணிக்க ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து அம்மாநில ஆணையர் ஓம் பிரகாஷ் கூறும்போது “ பாலைவன வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சிரமமாக இருப்பதால் நாங்கள் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com