’’பாய்ஃப்ரண்ட் இல்லாவிட்டால் காலேஜ் வரவேண்டாம்’’ - விசித்திர நோட்டீஸால் அதிர்ந்த மாணவிகள்!

’’பாய்ஃப்ரண்ட் இல்லாவிட்டால் காலேஜ் வரவேண்டாம்’’ - விசித்திர நோட்டீஸால் அதிர்ந்த மாணவிகள்!

’’பாய்ஃப்ரண்ட் இல்லாவிட்டால் காலேஜ் வரவேண்டாம்’’ - விசித்திர நோட்டீஸால் அதிர்ந்த மாணவிகள்!
Published on

ஆக்ராவில் பிரபலமான கல்லூரி ஒன்றில் பிப்ரவரி 14-க்குள் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பாய்ஃப்ரண்ட் இல்லாவிட்டால் கல்லூரிக்கு வரவேண்டாம் என்ற விசித்திர நோட்டீஸ் ஒன்று வலம்வந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆக்ராவின் பிரபல கல்லூரிகளில் ஒன்று செயின்ட் ஜான்’ஸ் கல்லூரி. அந்த கல்லூரியின் லோகோ பதிக்கப்பட்ட லெட்டர் பேடில், பேராசியர் ஆசிஷ் ஷர்மா கையெழுத்திடப்பட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

ஜனவரி 14 என தேதியிடப்பட்ட அந்த நோட்டீஸில், ‘’பிப்ரவரி 14-க்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு பாய்ஃப்ரண்டாவது இருக்கவேண்டும். இது பாதுகாப்பு கருதி அறிவிக்கப்படுகிறது. சிங்கிள் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை. மாணவிகள் தங்கள் பாய்ஃப்ரண்ட் உடனான சமீபத்திய புகைப்படத்தை காண்பிக்கவேண்டும். அன்பை பகிருங்கள்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இது வாட்ஸ்-அப்பில் பெரும்பாலும் பகிரப்பட்டதால் கல்லூரி மாணவிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் முதலில் பெற்றோரிடம் இதுபற்றி கூற சில மாணவிகள் தயங்கியிருக்கின்றனர். ஆனால் சில மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தைரியமாக கூறியதால், அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தும்படி அறிவுறுத்தி இருக்கின்றனர். பிறகு மாணவிகளும் ஆசிரியர்களும் சேர்ந்து கல்லூரி பிரின்ஸ்பல் எஸ்.பி.சிங்கின் கவனத்திற்கு இதை கொண்டுசென்றிருக்கின்றனர்.

இதுபற்றி அவர் விசாரித்து விளக்கமளித்திருக்கிறார். அதில், ‘’கல்லூரி நிர்வாகத்தின் பெயரை குலைக்க சிலர் சதிவேலையில் ஈடுபட்டு தவறான செய்தியை பரப்பியிருக்கின்றனர். எனவே மாணவிகள் அந்த நோட்டீஸை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். இதை செய்தது யார் என்பதை கல்லூரி நிர்வாகம் விரைவில் கண்டுபிடிக்கும். மேலும் ஆசிஷ் சர்மா என்ற பெயரில் பேராசிரியர் யாரும் பணிபுரியவில்லை. இது கடைசிவருட மாணவர்களின் வேலையாகவும் இருக்கலாம்
என சந்தேகம் எழுந்திருக்கிறது’’ எனவும் விளக்கமளித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com