இந்தியா
தூத்துக்குடியில் தேக்கம் அடைந்துள்ள 15 ஆயிரம் டன் கருவாடுகள்... ஏன் தெரியுமா?
தூத்துக்குடியில் தேக்கம் அடைந்துள்ள 15 ஆயிரம் டன் கருவாடுகள்... ஏன் தெரியுமா?
இலங்கை அரசு விதித்துள்ள தடையின் காரணமாக, தூத்துக்குடியில் தேக்கி வைக்கப்பட்ட கருவாடுகளை அந்நாட்டிற்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தேக்கம் அடைந்துள்ள 500 கோடி ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் டன் கருவாடுகளை இலங்கையில் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் இருந்து மீன் மற்றும் கருவாடுகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ள இலங்கை, கருவாடுகளுக்கு மூன்று மடங்கு வரியும் விதித்துள்ளது. ஏற்கனவே ஒரு கிலோ கருவாடுக்கு 100 ரூபாய் வரி இருந்ததை தற்போது 300 ரூபாயாக இலங்கை உயர்த்தியுள்ளது.