இந்தியா
சபரிமலை வரும் பெண்களுக்கு வயதுச் சான்று கட்டாயம்!
சபரிமலை வரும் பெண்களுக்கு வயதுச் சான்று கட்டாயம்!
சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வயதுச் சான்றை கட்டாயமாக்க திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐதீகப்படி 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இவ்வயதுக்குள் உள்ள பெண்கள் சிலர் தவறான வயதை கூறி கோயிலுக்குள் நுழைய முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து வயதுச் சான்று அடிப்படையில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. நடப்பு சீசனில் இருந்தே வயதுச்சான்று நடைமுறை தொடங்கப்படும்.