பாலியல் புகார் குறித்து விசாரிக்க ‘அம்மா’வில் குழு

பாலியல் புகார் குறித்து விசாரிக்க ‘அம்மா’வில் குழு

பாலியல் புகார் குறித்து விசாரிக்க ‘அம்மா’வில் குழு
Published on

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக விசாரணை நடத்த குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் கடந்த ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இதனால் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் இருந்து திலீப் நீக்கப்பட்டார். 

இதையடுத்து ‘அம்மா’வின் தலைவராக இருந்த இன்னசென்ட் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகியதால் மோகன்லால் அந்தப் பதவியில் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற சில நாட்களில் திலீப் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டார். 

இதற்கு ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் சங்கத்தில் இருந்து ராஜினாமாவும் செய்தனர். 

இதையடுத்து தான் நிரபராதி என நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைவதாக கூறி திலீப் சங்கத்தில் இருந்து விலகுவதாக மோகன்லாலுக்கு கடிதம் அனுப்பினார். எனவே திலீப்பை மீண்டும் சேர்ப்பது குறித்த முடிவை மாற்றியது ‘அம்மா’. 

இதையடுத்து கேரளத் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த நடிகைகள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகவும் மலையாள சினிமாவில் இதுபோன்ற குழு இதுவரை அமைக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது. 

மேலும் இந்தக் குழுவை அமைக்க மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ‘அம்மா’வுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக விசாரணை நடத்த குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதில் சங்கத்தில் இருந்து நான்கு அல்லது ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் நடிகைகள் லட்சுமி கோபாலசுவாமி, ஆஷா சரத், ஸ்வேதா மேனன் மற்றும் ரக்‌ஷனா நாராயணன்குட்டி இடம் பெற்றுள்ளனர். 

மேலும் இந்தக் குழுவில் வழக்கறிஞர் அல்லது சமூக ஆர்வலர் ஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது சட்ட விதி. இதனால் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் வழக்கறிஞர் பிரீத்தி ராமகிருஷ்ணன் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இதுகுறித்து பிரீத்தி கூறுகையில், “ஆமாம். நான் குழுவில் இருப்பேன். ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கடிதமும் எனக்கு வரவில்லை.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com