'லவ் ஜிஹாத்'-க்கு எதிராக கடுமையான சட்டம்: உ.பி-யில் யோகி அரசு தீவிரம்

'லவ் ஜிஹாத்'-க்கு எதிராக கடுமையான சட்டம்: உ.பி-யில் யோகி அரசு தீவிரம்
'லவ் ஜிஹாத்'-க்கு எதிராக கடுமையான சட்டம்: உ.பி-யில் யோகி அரசு தீவிரம்

மத்தியப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களைத் தொடர்ந்து 'லவ் ஜிஹாத்'-துக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற தீவிரம் காட்டி வருகிறது உத்தரப் பிரதேச அரசு.

அலகாபாத் உயர்நீதிமன்றம் 'திருமணத்திற்காக மட்டுமே மத மாற்றம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி, `லவ் ஜிஹாத்'-துக்கு எதிராக கடுமையான சட்டம் என்று பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் அறிவித்தனர். "தங்கள் மத அடையாளத்தை மறைத்து வைத்து பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். உங்கள் வழிகளைச் சரிசெய்து கொள்ளுங்கள். இல்லை... உங்கள் இறுதி பயணத்திற்கு தயாராக இருக்க வேண்டி வரும். கடுமையான சட்டத்தை கொண்டுவந்து அரசாங்கம் லவ் ஜிஹாத்தை நிறுத்தும்" என்று கூறிய முதல் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இதன்பின் இந்த விவகாரத்தில் ஹரியானா, மத்திய;g பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் வரிசைகட்டி, லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டம் இயற்ற உள்ளதாக அறிவித்து வருகின்றனர். அதிலும், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் ஒருபடி மேலே சென்று, லவ் ஜிஹாத்தை தடுப்பதற்கான வழிகளையும் மத்திய அரசு கவனித்து வருவதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும், "மாநில அரசும் இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வருகிறது. இதைத் தடுக்க சட்ட விதிகளை பரிசீலிப்பதால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது" என்று அதிரடியாக கூறினார்.


இந்த வார தொடக்கத்தில், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா பாஜக அரசுகள் லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டம் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். சட்ட மசோதா ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுவிட்டது. அதன்படி, விதிகளை மீறினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவு, குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் வழக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டமுன்வடிவு விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய பிரதேசம் அறிவித்துள்ளது.

"அதிகரித்து வரும் லவ் ஜிஹாத் சம்பவங்களை கருத்தில் கொண்டு மாநில சட்டமன்றத்தின் அடுத்த அமர்வில் தர்ம ஸ்வதந்த்ரியா (மத சுதந்திரம்) மசோதா 2020ஐ அறிமுகப்படுத்தப்போகிறோம்" என்று சிவராஜ் சிங் சவுகான் அரசு தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா அரசுகளைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு இதேபோன்ற நடவடிக்கையை அறிவித்துள்ளது. லவ் ஜிஹாத் வழக்குகளை தடுக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றும் என்று அம்மாநில உள்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த மசோதா தொடர்பாக சட்டத்துறையின் ஆய்வை மேற்கொண்ட பின்னர், முதல்வர் அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், இப்போது சட்டத் துறையால் உள்துறைக்கு ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, மாநில உள்துறை மத்திய சட்ட அமைச்சகத்தை அணுகியுள்ளது. அங்கிருந்து ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com