\
அப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்!

அப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்!

அப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்!
Published on

தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த மாமியார் ஒருவர்.

ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கனி தேவி (60). இவரது மருமகள் சோனிகா (30). இவரது இரண்டு சிறுநீரகங் களும் பாதிக்கப்பட்டுவிட்டன. இதனால் டயாலிசிஸ் செய்து வந்தார். இந்நிலையில், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 

சோனிகாவின் அம்மா பன்வாரி தேவி, அப்பா, சகோதரரின் சிறுநீரகம் அதே ரத்த வகையை கொண்டதாக இருந்தது. ஆனால், அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயந்து தங்கள் சிறுநீரகத்தை சோனிகாவுக்கு கொடுக்க மறுத்துவிட்டனர். சோனிகாவின் நிலைமை தினமும் மோசமாகி வந்த நிலையில், அவரது மாமியார் கனிதேவி, தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார். உடனடியாக அவரது ரத்த வகை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒத்துப்போனதை அடுத்து கனிதேவியின் ஒரு சிறுநீரகம் சோனிகாவுக்கு கடந்த 13 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. தற்போது இருவரும் நலமாக உள்ளனர். 

2 குழந்தைகளின் தாயான சோனிகா, என் மாமியாருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com