தேனிலவு கொலை எதிரொலி | சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதி.. மேகலயா அரசு அதிரடி முடிவு!
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், மேகாலயாவிற்குச் சென்றபோது தனது மனைவியால் கொல்லப்பட்டார். இது தேனிலவு கொலை என வழக்குப் பதியப்பட்டு நாடு முழுவதும் பேசுபொருளானது. இந்த நிலையில், தேனிலவு கொலைக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளுக்கு மேகாலயா அரசு புதிய விதிகளை விதித்துள்ளது. அதாவது, தேனிலவு கொலைக்குப் பிறகு, மேகலயா சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பற்றது என்றும் அதன் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது என்றும் சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் கிளம்பின.
தவிர, இந்த கொலை சம்பவம் ஆரம்பத்தில் செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் கவனத்தை ஈர்த்தபோது, அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களைக் கொண்ட சிலர் மேகாலயாவும் பொதுவாக வடகிழக்குப் பகுதிகளும் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று கருதத் தொடங்கினர். இந்த நிலையில்தான் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் செய்யும்போது அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டிகளை அவசியம் அழைத்துச் செல்ல வேண்டும் என மேகாலயா அரசு கட்டாயமாக்கியிருப்பதாக மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு சங்கத்தின் துணை ஆணையரும் தலைவரும் தெரிவித்துள்ளனர்.