இந்தியா
ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி அமோக வெற்றி
ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி அமோக வெற்றி
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவர், துணை தலைவர், பொதுச் செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏபிவிபி, எஸ்எல்விடி உள்ளிட்ட அமைப்பினர் போட்டியிட்டனர். 3900-க்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஏபிவிபி அமோக வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது. தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் 8 ஆண்டுகளுக்கு பின் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி வெற்றி பெற்றிருக்கிறது. இதனை அந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.