இந்தியா
கொரோனா முடிந்ததும் அனைவருக்கும் ராமர் தரிசனம்: யோகி ஆதித்யநாத்
கொரோனா முடிந்ததும் அனைவருக்கும் ராமர் தரிசனம்: யோகி ஆதித்யநாத்
மஹர்ஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு சித்ரகூட்டின் லாலாபூர் கிராமத்தில் உள்ள வால்மீகி ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘’கொரோனா வைரஸ் தொற்று முடிந்ததும், மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ராமர் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா இல்லாதிருந்தால், கிராமங்களிலிருந்து அனைவரையும் அயோத்திக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருப்போம். தொற்றுநோய் முடிந்த பிறகு, அனைவருக்கும் ராமர் தரிசனம் கிடைக்கும்" என்று அவர் கூறினார்.

