\
மும்பை ரயில் நிலைய நடை மேம்பாலங்களை சீரமைக்க உத்தரவு

மும்பை ரயில் நிலைய நடை மேம்பாலங்களை சீரமைக்க உத்தரவு

மும்பை ரயில் நிலைய நடை மேம்பாலங்களை சீரமைக்க உத்தரவு
Published on


மும்பையில் ரயில்நிலைய நடை மேம்பாலங்களை சீரமைக்க, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட உயிரிழப்பைத் தொடர்ந்து அனைத்துப் புறநகர் ரயில் நிலையங்களில் இருக்கும் நடை மேம்பாலங்களை ஆய்வு செய்து சீரமைக்க ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். இப்பணிகளை ஒரு வாரத்தில் முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 39 பேரை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com