"இதுவும் ஒரு கட்டிப்பிடி வைத்தியம்தான்" காண்டாமிருகத்தை அணைக்கும் யானை !

"இதுவும் ஒரு கட்டிப்பிடி வைத்தியம்தான்" காண்டாமிருகத்தை அணைக்கும் யானை !
"இதுவும் ஒரு கட்டிப்பிடி வைத்தியம்தான்" காண்டாமிருகத்தை அணைக்கும் யானை !

ஆப்பிரிக்க நாட்டு காட்டில் யானை ஒன்று ஆற்றங்கரையோரத்தில் சோர்வாக இருக்கும் காண்டாமிருகத்தை தன் தும்பிக்கைகளால் கட்டிப்பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இந்தப் பொது முடக்கக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விலங்குகளின் சேட்டை மிகுந்த வீடியோக்கள் மக்களை பெரும்பாலும் மகிழ்வித்து வருகின்றன.

எப்போதும் நகர வாழ்க்கையின் பிசியாக இருக்கும் பலரும் இந்தக் கொரோனா காலத்தில் விலங்குகளின் குறும்புச் சேட்டைகளை ரசிக்கத் தொடங்கியுள்ளனர். பலருக்கும் இதுபோன்ற வீடியோக்கள் பெரும் ஆறுதலையும் சந்தோஷத்தையும் தந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல. வீட்டிலேயே முடங்கியிருக்கும் மக்களுக்கும் இதுபோன்ற வீடியோக்கள் பெரும் ஆறுதலாகவே இருக்கிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா பொது முடக்கம் தொடங்கிய நாளில் இருந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளின் அழகிய வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இப்போது ஆப்பிரிக்க காட்டு யானை ஒன்று சோர்வாக காணப்படும் இரட்டைக் கொம்பு காண்டாமிருகத்தை தும்பிக்கையில் கட்டிப்பிடிப்பதுபோன்ற வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

இது குறித்து அந்தப் பதிவில் "எப்போதும் ஒரு சின்ன அணைப்பு மனதுக்கு நெருக்கமாக இருக்கும்" என சுசாந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com