\
பயங்கரவாதத்தை அழிக்க கூட்டு முயற்சி தேவை - ஆப்கானிஸ்தான் அதிபர்

பயங்கரவாதத்தை அழிக்க கூட்டு முயற்சி தேவை - ஆப்கானிஸ்தான் அதிபர்

பயங்கரவாதத்தை அழிக்க கூட்டு முயற்சி தேவை - ஆப்கானிஸ்தான் அதிபர்
Published on

புற்றுநோய் போல் பரவியுள்ள பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க கூட்டு முயற்சி தேவை என ஆப்கானிஸ்தான் அதிபர் தெரிவித்துள்ளார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடுமுழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ள மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படை, கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி எதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள். இதற்கு ஈடாக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டு வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்த்திற்கு அஷ்ரஃப் கனி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் போல் பரவியுள்ள பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க கூட்டு முயற்சி தேவை என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com