காவிரி வழக்கில் நிபுணர்களைக் கொண்டு வாதிடுங்கள்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

காவிரி வழக்கில் நிபுணர்களைக் கொண்டு வாதிடுங்கள்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

காவிரி வழக்கில் நிபுணர்களைக் கொண்டு வாதிடுங்கள்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
Published on

காவிரி வழக்கில் நிபுணர்களைக் கொண்டு வாதாடுமாறு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது, தவறான சாகுபடி முறைகளால் காவிரி நீரை கர்நாடகா வீணடிப்பதாக தமிழகத் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தமிழகத் தரப்பின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், பெருமழை பொழியும் காலங்களில் மேட்டூர் உள்ளிட்ட அணைகளில் நீரை சேமித்து வைக்கும்போது அது வறட்சி காலங்களில் கை கொடுக்கும் அல்லவா என்று கேள்வி எழுப்பினர். கர்நாடகா தண்ணீர் தர இயலாத நிலையில் இருக்கும்போது சேமிக்கப்பட்ட நீரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வழக்கில் நிபுணர்களைக் கொண்டு வாதாடுமாறு தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், ஒவ்வொரு நிபுணர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க தலா 45 நிமிடம் வழங்கப்படும் எனக் கூறினார். நிபுணர்களின் வாதம் அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com