\
மக்களவையின் நெறிமுறை குழு தலைவராக மீண்டும் அத்வானி நியமனம்

மக்களவையின் நெறிமுறை குழு தலைவராக மீண்டும் அத்வானி நியமனம்

மக்களவையின் நெறிமுறை குழு தலைவராக மீண்டும் அத்வானி நியமனம்
Published on

நாடாளுமன்றத்தின் மக்களவை நெறிமுறை குழு தலைவராக, பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி மீண்டும் நியமிக்‍கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை நெறிமுறை குழு தலைவராக  எல்.கே. அத்வானியை, சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் மீண்டும் நியமித்துள்ளார். அத்வானியுடன் மற்ற 14 உறுப்பினர்களும் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை உறுப்பினர்கள் யாரேனும் நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டால், அவர்கள் மீதான புகார்களை இந்த குழு ஆய்வு செய்து, அவர் மீதான நடவடிக்கைக்கு சபாநாயகருக்கு சிபாரிசு செய்யும். அதேபோல், தொகுதி மேம்பாட்டு நிதிக்குழுவின் தலைவராக  துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com