மதத்தைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு: நீதிமன்றம் உறுதி

மதத்தைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு: நீதிமன்றம் உறுதி
மதத்தைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு: நீதிமன்றம் உறுதி
Published on

வயது வந்தோர் தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல், யாரை திருமணம் செய்துகொள்வது என்பதைத் தேர்வு செய்ய உரிமை உண்டு என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நீதிபதிகள் மனோஜ் குமார் குப்தா மற்றும் தீபக் வர்மா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், "தற்போதைய மனு இரண்டு திருமண வயது வந்த நபர்களின் கூட்டு மனுவாக இருப்பதால், அவர்கள் ஒருவருக்கொருவர் காதலிப்பதாகவும், திருமண வயதை அடைந்தவர்களாக இருப்பதாகவும் கூறுகின்றனர். எனவே, அவர்களின் திருமண உறவை அவர்களின் பெற்றோர் கூட எதிர்க்க முடியாது” என்று கூறியது.

இந்த மனுவில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷிஃபா ஹசன் மற்றும் அவரது காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும், தங்கள் விருப்பப்படி ஒன்றாக வாழ்வதாகவும் கூறினர். இந்த மனுவில் ஹசன், தான் ஒரு முஸ்லீமாக இருந்து இந்துவாக மாறுவதற்கான விண்ணப்பத்தையும் தாக்கல் செய்திருப்பதாகக் கூறினார். மேலும், ஹசன் தனது தந்தை திருமணத்திற்கு சம்மதிப்பதாகவும், இருந்தாலும் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அஞ்சுவதாகவும் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com