குட்டிப்பெண் சீதையின் அழகிய நடனத்தால் அசந்துபோன இணையவாசிகள்: வீடியோ!

குட்டிப்பெண் சீதையின் அழகிய நடனத்தால் அசந்துபோன இணையவாசிகள்: வீடியோ!

குட்டிப்பெண் சீதையின் அழகிய நடனத்தால் அசந்துபோன இணையவாசிகள்: வீடியோ!
Published on

சீதையின் வேடமணிந்து இசைக்கேற்ப தன்னை மறந்து நடனமாடிய குட்டிப்பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது

ஆயுத பூஜை, விஜயதசமி என இந்த மாதம் பண்டிகை காலமாகவே உள்ளது. இந்தியாவின் பல இடங்களிலும் ராமாயண நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. வயது வித்தியாசமின்றி பலரும் வேடமணிந்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இரண்டு நாட்களாக இணையத்தை குட்டிப்பெண் சீதை கலக்கி வருகிறார். 

சீதை வேடமணிந்து அந்த குட்டிப்பெண், அங்கு இசைக்கப்படும் இசைக்கேற்ப தன்னையே மறந்து நடனமாடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து குட்டிப்பெண் சீதையின் அழகான நடனத்தை பாராட்டி வருகின்றனர். 22 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் ராமர் மற்றும் லெட்சுமணன் வேடங்கள் தரித்த சிறுவர்கள் கூட்டத்தை கண்டு மிரண்டு நிற்கின்றனர். 

ஆனால் சீதை வேடமணிந்த சிறுமி யாரையும் பொருட்படுத்தாமல் அழகாக நடனம் ஆடுகிறார். ''சீதை ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள்''? , ''குட்டி சீதை என் நாளை அழகாக்கி விட்டாள்'' என்றும் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com